சென்னை வணிக வளாகத்தில் "அடுக்குமாடி குடியிருப்புக் கண்காட்சி" 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தனக்கென சொந்தமாக ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக உள்ளது. நம் அனைவரின் கனவுகளுக்கும் ஒரு சிறப்பான தளம் அமைத்துத் தருவதே இக்கண்காட்சியின் முதன்மையான நோக்கம் ஆகும். பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், தொன்னூறுக்கும் மேற்பட்ட கட்டிட வல்லுனர்களும் கலந்து கொண்டு தனது செயல்முறைத் திட்டங்களை காட்சிப்படுத்துவர் என எதிர் பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் ரூ. 1 லட்சத்திலிருந்து அதிக பட்சமாக ரூ. 5 கோடி வரை மனைகள் இடம் பெற்றுள்ளன.
கட்டிட வல்லுனர்களும், பொறியாளர்களும் தனது திறனை செயல் முறைகள் மற்றும் முன் மாதிரிகள் மூலம் வெளிக் கொணர அருமையான தளமாக அமையவுள்ளது. கட்டிட வல்லுனர்களின் திறனை வெளிப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் ஆகும். நீச்சல் குளம், மனமகிழ் மன்றம், விளையாட்டு மற்றும் பொழுது போக்குப் பூங்கா அமைப்பதற்கும் இக்கண்காட்சி இடம் வகுத்துத் தருகிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவோர், தனி வீடு மற்றும் மாளிகை வாங்குவோர், தகவல் தொழிற்நுட்ப துறையினர், மேலும் பலர் இக்கண்காட்சியில் பார்வையாளர்களாக எதிர்பார்க்கபடுவர்.



No comments:
Post a Comment